6 வருடங்களுக்கு பிறகு ..இதை செய்யப்போகும் டேவிட் வார்னர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் 6 வருடங்களுக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்றதற்காக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
சிட்னி : கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டெவன் ஸ்மித் இருவரும் விளையாடி கொண்டிருக்கும் பந்தை மணல் தாள் வைத்து சேதப்படுத்தியதன் காரணமாக இருவருக்கும் ஒரு வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் உள்ளூர் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இதனால், ஒரு வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய, உள்ளூர் தொடர், ஐபிஎல் போன்ற தொடர்களில் பேட்டிங் மட்டும் விளையாடி வந்தார்.
ஒரு சில போட்டிகளில் தன்னை யார் என்று நிரூபிக்கச் சிறப்பான பேட்டிங்கும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் தான் செய்த குற்றத்திற்கு வருந்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் ஆஜராகி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதனால், அவர் மீது விதிக்கப்பட்ட அந்த கேப்டனாகும் தடையையும் நீக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதனால், அவர் எப்போது எந்த அணிக்கு மீண்டும் கேப்டனாக செயல்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா தொடரான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் ‘சிட்னி தண்டர்ஸ்’ அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்திலிருந்து வருகின்றனர்.