ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெங்களூர் அணி வீரர்களான ஆடம் சாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன், 48 மணிநேரம் காத்திருப்புக்கு பின் தங்களின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்தவகையில் பெங்களூர் அணி வீரர்களான ஆடம் சாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன், 48 மணிநேரம் காத்திருப்புக்கு பின் தங்களின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியா பிரதமர் இந்தியாவுடனான விமான சேவையை நிறுத்தி, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் ஆஸ்திரேலியா திரும்ப வேண்டும் என்றால் தனி விமானம் மூலம், தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…