Asia Cup 2023 : 4 ஆண்டுகள்.. இந்தியா vs பாகிஸ்தான்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் இன்றைய கிரிக்கெட் போட்டி.!

Pakistan Cricket Team Captain Babar Azam - Indian Cricket Team Captain Rohit sharma

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொண்டு அபார வெற்றியை கைப்பற்றியது இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை வங்கதேசத்தை எதிர்கொண்டு வெற்றி கண்டது.

இதனை தொடர்ந்து 3வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கையில் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் விளையாட உள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்குள் துவங்க உள்ளது.

இறுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த 2019 ஜூன் மாதம் உலகக்கோப்பை தொடரில் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி கண்டு இருந்தது. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகளும், பி பிரிவில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர், அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதி அதில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்