CskvsRCB 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை சென்னை பதிவு செய்தது. சேப்பாக் மைதானத்தில் சென்னையிடம் பெங்களூர் அணி தோல்வி அடைவது புதிது இல்லை.
இதுவரை நேற்று விளையாடிய போட்டிகளையும் சேர்த்து இரண்டு அணிகளும் சென்னை சேப்பாக் மைதானத்தில் 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 8 போட்டிகளில் சென்னை அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மோதிய போட்டியில் தான் பெங்களூர் முதன் முறையாக சென்னை அணியை சேப்பாக் மைதானத்தில் வீழ்த்தியது.
அதனை தொடர்ந்து சென்னை அணியுடன் பெங்களூர் அணி சேப்பாக் மைதானத்தில் மோதிய எந்த போட்டியிலும் வெற்றிபெறவே இல்லை. 2008 ஆண்டுகளில் இருந்து இன்னும் வரை சென்னையை அவர்களுடைய சொந்த மைதானமான சேப்பாக் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்த முடியாமல் பெங்களூர் அணி திணறி வருகிறது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…