சேப்பாக்கம் என்றாலே சாபம் தான் ! தோல்வியை தொடரும் ஆர்சிபி!

csk vs rcb

CskvsRCB 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை சென்னை பதிவு செய்தது. சேப்பாக் மைதானத்தில் சென்னையிடம் பெங்களூர் அணி தோல்வி அடைவது புதிது இல்லை.

இதுவரை நேற்று விளையாடிய போட்டிகளையும் சேர்த்து இரண்டு அணிகளும் சென்னை சேப்பாக் மைதானத்தில் 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 8 போட்டிகளில் சென்னை அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மோதிய போட்டியில் தான் பெங்களூர் முதன் முறையாக சென்னை அணியை சேப்பாக் மைதானத்தில் வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து சென்னை அணியுடன் பெங்களூர் அணி சேப்பாக் மைதானத்தில் மோதிய எந்த போட்டியிலும் வெற்றிபெறவே இல்லை. 2008 ஆண்டுகளில் இருந்து இன்னும் வரை சென்னையை அவர்களுடைய சொந்த மைதானமான சேப்பாக் மைதானத்தில் சென்னை அணியை  வீழ்த்த முடியாமல் பெங்களூர் அணி திணறி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்