2 ஆண்டுகளுக்கு பிறகு புனேயில் டி20 போட்டி.! ரசிகர்களுக்கு சிறப்பு ஏற்பாடு வசதி.!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி, நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Ind vs Eng 4th T20 Matc

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நாளை (ஜனவரி 31 ஆம் தேதி) மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் 4வது டி20 போட்டிக்கான முழு ஏற்பாடுகளை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு புனேயில் நடைபெறவுள்ள இந்த டி20 போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து எம்சிஏ அதிகாரிகள் கூறியது என்னவென்பதை பார்க்கலாம்.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் சந்தோஷ் பாப்டே, மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி, துறை சார்பில் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு இலவச சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

மேலும், இந்த போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு வாகனம் நிறுத்துவதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபோக, சுமார்45 ஏக்கர் நிலத்தை பார்க்கிங்கிற்காக எடுத்துள்ளது,  பார்வையாளர்களுக்கு பார்க்கிங் இலவசம் என்று தெரிவித்தார்.

மேலும், ஐந்து வாயில்கள் வழியாக வரும் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் செல்வதற்கு சிறப்பு வழித்தடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் வசதிக்காக MCA இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தொடர்பான பாதைகள் பற்றிய தகவல்களுடன் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died
TNGovt - mathiazhagan mla