17 ஆண்டுகளுக்கு பிறகு ..18 வது ஓவரில் … சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!

Pat Cummins

பேட் கம்மின்ஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின், சூப்பர் சுற்றானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், வங்கதேச அணியும் இன்று மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியே ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய அந்த 8 விக்கெட்டில் 3 விக்கெட்டை பேட் கம்மின்ஸ் கைப்பற்றி இருந்தார்.

அவர் கைப்பற்றிய அந்த 3 விக்கெட்டுகளும் ‘ஹாட்ரிக்’ முறையில் கைப்பற்றி இருந்தார். இதனால், நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முதல் பந்து வீச்சாளராக ஹாட்ரிக் எடுத்து  பேட் கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, போட்டியின் 18வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார்.

அந்த ஓவரின் 5-வது பந்தில் வங்கதேச வீரரான மஹ்மதுல்லா போல்டாகினார். அதன்பின் அந்த ஓவரின்  கடைசி பந்தில் மெஹதி ஹசன் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் ஓவர் முடிந்தது, அதன்பின் கடைசி மற்றும் 20-தாவது ஓவரை அவர் வீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் கம்மின்ஸிற்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய அவர்,  ஹிரிடாய் ஸ்கூப் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட்லீ ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார். அதன் பின் வங்கதேச அணிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஹாட்ரிக்கின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில், ஹாட்ரிக் எடுத்தவர்கள் பட்டியலில் 7-வது வீரராகி இருக்கிறார் பேட் கம்மின்ஸ். இவருக்கு முன் பிரட்லீ, குர்திஸ் காம்பர், ஹசரங்கா, ரபாடா, கார்த்திக் மெய்யப்பன், ஜோஷ்வா லிட்டில் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்