மலிங்காவின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்!
டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.
ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷித் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளனர். அதன்படி, இலங்கையின் லசித் மலிங்கா (76 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் டிம் சவுதி (82 இன்னிங்ஸ்) மற்றும் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் (83 இன்னிங்ஸ்) ஆகியோருடன் தற்போது ரஷித் காணும் இணைந்துள்ளார்.
76-வது ஆட்டத்தில் 100வது விக்கெட்டை எடுத்த இலங்கை வீரர் லலித் மலிங்காவின் சாதனையை, ரஷித் கான் தனது 53-வது போட்டியிலேயே 100வது விக்கெட்டை எடுத்து அவரது சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
???? wickets in T20Is for Rashid Khan ????
He gets the scalp of Hafeez, who is gone for 10!#T20WorldCup | #PAKvAFG | https://t.co/1VM4iAyNq4 pic.twitter.com/VSOsYbDRz9
— T20 World Cup (@T20WorldCup) October 29, 2021