ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ,அக்டோபர் 16 அன்று தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது. எவின் லீவிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் க்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எவின் லீவிஸ், 2021ஆம் வருடம் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பின் உடற்தகுதி காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமிக்க வீரர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லெக் ஸ்பின்னர் ஆல் ரவுண்டரான, யான்னிக் கேரியா வுக்கு அணியில் முதன் முறையாக இடம் கிடைத்துள்ளது.
கேப்டனாக நிக்கோலஸ் பூரானும் துணை கேப்டனாக ரோவ்மன் பவலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியின் விவரம் வருமாறு: நிக்கோலஸ் பூரான்(C), ரோவ்மன் பவல்(VC), சிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், எவின் லீவிஸ், ஜான்சன் சார்லஸ், கைல் மேயர்ஸ், யான்னிக் கேரியா, அகில் ஹூசேன், ஒபேட் மெக்காய், அல்சாரி ஜோசப், ரேமன் ரெய்பர், ஷெல்டன் காட்ரெல், பிராண்டன் கிங், ஓடியன் ஸ்மித்.
இதே போன்று ஆப்கானிஸ்தான் அணியும் தனது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை வழி நடத்திய முகமது நபி கேப்டனாக தொடர்கிறார்.
ஆசியக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த சமியுல்லா ஷின்வரி, ஹஸ்மதுல்லா ஷாஹிடி, அப்சர் சாசாய், கரீம் ஜானட், மற்றும் நூர் அஹ்மத் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.மேலும் டர்விஷ் ரசூலி, க்கைஸ் அஹ்மத், சலீம் சாபி சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணியின் விவரம்: முகமது நபி(C), நஜிபுல்லா சட்ரான்(VC), ரஹ்மானுல்லா குர்பாஸ்(WK), ஆஸ்மதுல்லா ஒமர்சாய், டர்விஷ் ரசூலி, க்கைஸ் அஹ்மத், சலீம் சாபி, பரிட் அஹ்மத் மாலிக், பாசல் ஹக் பாரூக்கி, ஹஸ்ரதுல்லா சசாய், இப்ராஹிம் சட்ரான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ரஷீத் கான், உஸ்மான் கானி