திடீரென தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர்..? ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்..!

Published by
murugan

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். டி20 தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மாவும்,  ஆப்கானிஸ்தான் அணியை இப்ராகிம் சத்ரான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இத்தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை ( ஜனவரி 11ஆம் தேதி) நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ரஷித் கான் முதுகுக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது இந்த தொடரிலும் வெளியேறினால்  அணிக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிய தல தோனி! வைரலாகும் வீடியோ..

வழக்கமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ரஷித் இருந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் ரஷித்கானுக்கு   பதிலாக இப்ராகிம் சத்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சத்ரன் கேப்டனாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…

12 minutes ago

சுனிதாவை அழைத்துவரும் திட்டம் ஒத்திவைப்பு! கடைசி நேரத்தில் வந்த திடீர் சிக்கல்?

வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…

20 minutes ago

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…

53 minutes ago

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

10 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

12 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

12 hours ago