தீபாவளியன்று சாலையோர மக்களுக்கு பணம் வழங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்..!
2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறியது. இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தனது நாட்டிற்கு திரும்பத் தயாராகிவிட்டாலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு ரஹ்மானுல்லா குர்பாஸ் சாலையோரத்தில் உறங்கும் மக்களுக்கு தீபாவளிப் பரிசை வழங்கியுள்ளார். குர்பாஸின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அகமதாபாத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வைரலான வீடியோவில், இரவு நேரத்தில் குர்பாஸ் அமைதியாக சாலையோரத்தில் உறங்கி கொண்டு இருந்தவர்களுக்கு அருகில் குறைந்தது ரூ.500 வைத்துவிட்டு செய்வது தெரிகிறது.
இந்த செயலை பார்க்கும்போது ஏழை மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே குர்பாஸின் நோக்கமாக உள்ளது. வீடியோவைப் பார்க்கும்போது உறங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு பணத்தை கொடுத்த பிறகு குர்பாஸ் அமைதியாக தனது காரில் அமர்ந்து சென்றுவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
Rahmanullah Gurbaz giving gifts to the poor and homeless on the streets of Ahmedabad without any PR or camera around on the eve of Diwali is the most touching thing you will ever see.
This is why these Afghans are loved so much in India ♥️pic.twitter.com/oPItimA0bi
— Roshan Rai (@RoshanKrRaii) November 12, 2023