இலங்கை பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி படும் தோல்வி !
நேற்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக குசால் பெரேரா , டிமுத் கருணாரட்ன ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
நிதானமாக விளையாடிய டிமுத் கருணாரட்ன 30 ரன்னில் விக்கெட்டை பறி கொடுத்தார்.பின்னர் இறங்கிய திருமன்னன் சிறிது நேரம் குசால் பெரேரா உடன் கூட்டணியில் விளையாடினர்.
பிறகு திருமன்னன் 25 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து வந்த குசன்ஸ் மெண்டிஸ் 2 ரன்னிலும்,ஏஞ்சலோ மேத்யூஸ் 0 ரன்னிலும், தனஞ்சய டி சில்வா 0 ரன்னிலும் , திஸ்ர பெரேரா 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.ஆப்கானிஸ்தான் அணிபந்து வீச்சில் முகமது நபி நான்கு விக்கெட்டை பறித்தார்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறி கொடுத்தது.இறுதியாக 32.4 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இலங்கை அணியில் நுவன் பிரதீப் நான்கு விக்கெட்டையும் ,லசித் மலிங்கா மூன்று விக்கெட்டையும் வீழ்த்தினார்.