பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து. முதலில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி சார்பில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் 286 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், தொடக்க ஆட்டக்காரரான ஷபீக் 58 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்தடுத்து வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து கொண்டுஇருக்கையில் ஷதாப் கான் இப்திகார் அகமது தலா 40 ரன்கள் எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது மூன்றுவிக்கெட்டையும், நவீன் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். 287 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்கள், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மத் ஷா இருவரும் அதிரடி காட்டினர். நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் 48*, ரஹ்மத் ஷா 77* ரன்களுடன் இருந்தனர்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024