நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில், ஹஸ்ரத்துல்லாஹ் 33 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழக்க, இதனையடுத்து, களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 ரன்களில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். பின்னர், முகமது ஷாஜாத் 45 ரன்களும் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, களம் கண்ட கேப்டன் முகமது நபி 32, அஸ்கர் ஆப்கான் 31 ரன்கள் எடுக்க இறுதியில், 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தனர். நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மேன், லோஃப்டி-ஈடன் தலா 2 விக்கெட்டுகளை பறித்தனர். 161 ரன்கள் இலக்குடன் நமீபியா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிரேக் வில்லியம்ஸ் 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து நிதானமாக விளையாடிய மைக்கேல் வான் 11, ஜான் நிகோல் 14 ரன் எடுக்க பிறகு மத்தியில் இறங்கிய டேவிட் வைஸ் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து, களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற இறுதியாக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியில் ஹமீத் ஹாசன், நவீன்-உல்-ஹக் தலா 3, குல்பாடின் நாப் 2 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…