இந்த ட்விஸ்ட எதிர்பாத்துருக்க மாடீங்க ..! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை, அப்கான்சிதான் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் சுற்றும், தொடரின் 48-வது போட்டியுமான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில்  விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பெரிதளவு ரன்களை சேர்க்க முடியாவிட்டாலும், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களால் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சேர்த்தது.

எளிய இலக்கு என்ற அலட்சியத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்து கொண்டே இருந்தது. அதன்படி தொடக்க வீரரான ஹெட், வார்னர் மற்றும் மார்ஷ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.

ஒரு முனையில், க்ளென் மேக்ஸ்வெல் மட்டும் ஒரு முனையில் நின்று தனி ஆளாக போராடினார் இருப்பினும் அவரும் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தாண்டி எந்த ஒரு வீரரும் ரன்களை எடுக்கவில்லை.

இதன் காரணமாக படிப்படியாக விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

அட்டகாசமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணியின் குல்புதின் நைப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் சர்வேதச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வலுவான ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருக்கிறது.

கடந்த, 2023ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைய இருந்த நிலையில் மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று வெற்றி பெற செய்திருப்பார்.

அந்த ஒரு வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் அணி தற்போது பழி தீர்த்தது என்றே கூறலாம். மேலும், இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி வாய்ப்பு தற்போது கேள்வி குறியாக மாறியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Published by
அகில் R

Recent Posts

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…

1 hour ago

இல்லாத அளவிற்கு உயர்ந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி! முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…

2 hours ago

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

4 hours ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

5 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

6 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

6 hours ago