உலகக்கோப்பையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின . இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் , ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.பிறகு சிறிது நேரத்தில் அடித்து விளையாட தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிய குல்படின் நைப் 12 பந்தில் 15 ரன்கள் அடித்தார்.அதில் 3 பவுண்டரி அடங்கும்.பின்னர் களமிறங்கிய முதல் பந்திலே ஹஷ்மதுல்லா அவுட் ஆனார்.அடுத்ததாக இக்ரம் அலி கில் களமிறங்க ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.
12-வது ஓவரில் ரஹ்மத் ஷா 35 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் மத்தியில் விளையாடிய அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா ஸத்ரான் இருவரும் 42 ரன்கள் குவித்தனர். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் அடித்தனர்.
பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டையும் , இமாத் வாசிம் ,
வஹாப் ரியாஸ் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.228 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரரான ஃபகர் சமான் 0 ரன்னில் அவுட் ஆக, இமாம் நிதானமாக ஆடி 36 ரன்களும், பாபர் அசாம் 45 ரன்களும், முகம்மது ஹபீஸ் 19 ரன்கள் என சீரான இடைவெளியில் நிதானமாக ஆடி அவுட் ஆனார்கள்.
ஹரிஷ் ஷோகள் 27 ரன்னில் அவுட்டாக, ஷரஃராஸ் அஹமத் 18 ரன்களில் ரன் அவுட் ஆக, ஷதாப் கான் 11 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் வஹாப் ரியாஸ் 15 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியில் 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…