AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளன.

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த குழுவில் இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டி, இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானது.
ஏனென்றால், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த போட்டியில் தோற்கும் அணி, கிட்டத்தட்ட வெளியேறிவிடும்.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் தோல்வியை ஆப்கானிஸ்தான் சந்தித்துள்ளது. இதனால், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் உள்ளது. மறுபுறம், இந்த போட்டி இங்கிலாந்து அணிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில், இந்தப் போட்டியிலும் வெற்றி பெற முயற்சிக்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், தற்போது டாஸ் போப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச உள்ளது.
இங்கிலாந்து அணி:
கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான அணியில், பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக் லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி:
கேப்டன் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இரு அணிகள் மோதல்
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இருவரும் கடைசியாக மோதியது 2023 உலகக் கோப்பையில்தான். அதில், ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025