இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெங்களூரு பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், பயிற்சி எடுத்து வரும் சூர்யகுமார் யாதவ் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
டாப் கியரில் இருப்பேன்
நான் பேட்டிங் செய்யும்போது எப்போதுமே டாப் கியரில் இருப்பேன். ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் செய்யும்போது அப்படி உணர்ந்து தான் பேட்டிங் செய்து வருகிறேன். ஒரு போட்டியில் விளையாடும்போது திடீரென நான் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாலும் கூட , எனக்கு அதைப்பற்றி எந்த பிரச்சனையும் இல்லை, ஏனென்றால் டக்அவுட்க்குள் எனது தயாரிப்பும் உற்சாகமும் அப்படியே இருக்கும்.
கிரிக்கெட் விளையாட ரொம்ப ஆர்வம்
நான் டக் அவுட்டில் இருக்கும்போது நான் எப்போதும் உற்சாகமாக உணர்கிறேன், ஏனென்றால், அந்த நேரத்தில் கூட நான் என்னுடைய பேட்டிங் எப்போது வரும் நாம் எப்போது சென்று பேட்டிங் செய்யலாம் என அந்த நேரத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த அளவிற்கு எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். எனவே பயிற்சி எடுக்கும்போதே நாம் நன்றாக விளையாடவேண்டும் என என்னுடைய மனதில் குறிக்கோள் வைத்துவிட்டு தான் விளையாடவே வருவேன்.
எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
நான் முதல் பந்தில் விளையாடும் போதெல்லாம், நான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நான் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க வேண்டும் என்றால், அது திடீரென எனக்கு தோணும் அப்போது அந்த திட்டத்தை நான் மைதானத்தில் செயல்படுத்துவேன். நான் ஒன்று அல்லது இரண்டு நல்ல ஷாட்களை விளையாடும்போது அல்லது விக்கெட்டுகளுக்கு இடையே எனது ஓட்டம் நன்றாக இருக்கும் போது தான் நான் சரியாக விளையாடுகிறேன் என்று உணர்வேன்” எனவும் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
ரோஹித், ராகுல் ட்ராவிட் கிட்ட ஆலோசனை
என்னை பொறுத்தவரை நான் டி20 போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன் என்று நினைக்றேன். டி20 கிரிக்கெட் போட்டியை போல ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடவேண்டும் என கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களிடம் சில அறிவுரைகளை கேட்டு அவர்களுடைய ஆலோசனை படி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்” எனவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை ஆசியகோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதுகிறது. அடுத்ததாக செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…