ராகுல் கொடுத்த அட்வைஸ் !! கோச் பதவியே வேண்டாம் .. மனம் திறந்த ஜஸ்டின் லாங்கர் !

Justin Langer

ஜஸ்டின் லாங்கர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் பதிவியை குறித்தும் அதன் அழுத்தம் குறித்தும் ஜஸ்டின் லாங்கர் கூறி இருக்கிறார்.

டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதற்கு ராகுல் ட்ராவிட்டுக்கு இணையான ஒரு பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது பெயர்கள் அடிப்பட்டு கொண்டே வருகிறது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ஜஸ்டின் லாங்கரின் பெயர் அடிப்பட்டது. இவர் தற்போது பிபிசியின் ஸ்டம்ப்ட் போட்காஸ்ட் (BBC’s Stumped Podcast) நிகழ்ச்சியில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியின் மேல் இருந்த அழுத்தம் குறித்து பேசி இருந்தார்.

இது குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “ஐபிஎல் தொடரில் எங்கள் அணியின் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் லக்னோ அணி கேப்டனான கே.எல். ராகுலுடன் உரையாடினேன். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் என்னிடம் சில விஷயம் கூறி இருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும், ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விடவும் அது கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று என்னிடம் கூறினார்.

ராகுல் கூறுவது மிகச் சரியான கருத்து தான். பயிற்சியாளர் பணி என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொழில் என்பதை நான் அறிவேன். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக செயலாற்றினேன். அந்த அனுபவத்தில் தான் சொல்கிறேன். அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் அதனால் நான் இந்த தலைமை பயிற்சியாளராகலாம் செயலாற்ற மாட்டேன்”, என்று கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்