அடேங்கப்பா…3 வது சதம்..! சுப்மன் கில் மிரட்டல் சாதனை..!
ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா 18 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இது இந்த தொடரில் இவருக்கு 3-வது சதமாகும்.