‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே.

ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். மேலும், அந்த காயத்திலிருந்தும் தற்போது மீண்டு வந்து கொண்டும் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் காயம் காரணமாக தற்போது தொடரில் தொடரிலிருந்து விலகி உள்ளார்

ஆனாலும் சிஎஸ்கே அணியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வேளை காயம் சரியானால் இவர் சென்னை அணி இனி விளையாட இருக்கும் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு அளித்த ஒரு பேட்டியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதிகளை இந்த முறை சேர்த்தது நல்லது தான் என கூறியுள்ளார்.

இதை குறித்து அவர் கூறியதாவது, “T20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு நீண்ட கால சவாலாக இருக்கும் இரண்டு பவுன்சர் விதியை சேர்த்தது மிக முக்கியமான ஒன்றாகும். இது பேட்ஸ்மேன்களை புதிதாக யூகிக்கவும் அவர்களுக்கு உதவிகிறது.

அதே நேரம் இதன் மூலம் வெவ்வேறு போட்டிகளில் அவர்கள் மீது அழுத்தத்தைப் ஏற்படுத்துவதற்கு பவுளர்களுக்கும் வழிகளை இந்த விதி உருவாக்குகிறது. 

மேலும் எதிர்காலத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறை படுத்தப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை”, என்று ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்