இன்றைய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோதி வருகிறது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம் , குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பிறகு ராஸி வான் , டு பிளெஸ்ஸிஸ் இருவரும் கூட்டணியில் இணைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நிதானமாக விளையாடிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 94 பந்தில் 100 ரன்கள் குவித்தார்.அதில் 7 பவுண்டரி ,2 சிக்ஸர் அடக்கும்.
பின்னர் ஆட்டம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ராஸி வான் 95 ரன்கள் அடித்தார்.இன்னும் ஐந்து ரன்கள் ராஸி வான் அடித்து இருந்தால் தென்னாப்பிரிக்கா அணியில் இன்றைய போட்டியில் இரண்டு சதம் அடித்து இருக்கும் ஆனால் அது தவறியது.
இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் , நாதன் லியோன் இருவருமே தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர். 326 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…