KKRvRCB: ஆரம்பமே அதிரடி…கைக்கு வந்த லட்டு கேட்சை விட்டு பிடித்த பெங்களூர்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் சுயாஷ் சர்மா கைக்கு வந்த லட்டு கேட்ச் ஒன்றை தவறவிட்டது பெங்களூர் வீரர்களை கோபமடைய செய்தது.

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, அதிரடியுடன் பேட்டிங் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு கொல்கத்தா அணி சுனில் நரேன் மற்றும் டி காக் ஆகியோரை களமிறக்க செய்தது.
களத்திற்கு வந்த டி காக் ஆரம்பமே அதிரடி கட்ட நினைத்து பேட்டை சுற்றினார். அதில் ஒரு பந்து பேட்டில் தெளிவாக பட்ட நிலையில் பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்ததாக 3-வது பந்தை சிக்சருக்கு சுழற்றி அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து பேட்டில் சரியாக படவில்லை என்ற காரணத்தால் வேகமாக மேலே சென்று லட்டு கேட்சாக பெங்களூர் வீரர் சுயாஷ் சர்மாவிடம் வந்தது.
அந்த கேட்சை அவர் பிடித்துவிடுவார் என மற்ற வீரர்களும் எதிர்பார்த்த நிலையில் தலையில் குண்டை போடும் விதமாக கேட்சை தவறவிட்டார். இதனை பார்த்த விராட் கோலிக்கு முகம் வாடிப்போனது. அத்துடன் மற்ற வீரர்களின் முகமும் வாடியது. அதன்பிறகு நான் இருக்கும்போது என்ன கவலை என அடுத்த பந்தில் ஜோஷ் ஹேசில்வுட் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். உடனே ஆர்சிபி வீரர்களும், வீரர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். டி காக் விக்கெட் எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக அவர் அதிரடி ஆட்டத்தில் பயங்கரமான ஓப்பனிங் கிடைத்திருக்கும். ஆனால், அவரை 4 ரன்களில் ஆட்டமிழக்க வைத்த காரணத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர்.