ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் நேற்றைய முதல் போட்டியில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கில்லும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடி காட்ட தொடங்கினர். ஆனால், துரதிஷ்டவசமாக கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ், அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து விளையாட்டினார். அந்த அதிரடியானஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் எப்படி அதிரடி காட்டினாரோ அதே அதிரடியில் விளையாடினார். அதனால், வெறும் 47 பந்தில் 100 ரன்கள் விளாசினார், இதனால் சர்வதேச போட்டியில் அறிமுகமான 2-வந்து போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அவருடன் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி 77 ரன்கள் சேர்த்தார். அதை தொடர்ந்து அபிஷேக் சர்மா 100 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில், ரிங்கு சிங்கின் ஒரு அதிரடி கேமியோவால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் பெரும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 என்ற இமாலய ரன்னை எடுத்தது.
அதை தொடர்ந்து இமாலய இலக்கான 235 ரன்கள் எடுக்க பேட்டிங் களம் இறங்கியது ஜிம்பாப்வே அணி. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜிம்பாப்வே அணியின் வீரர்களான வெஸ்லி மாதேவெரேவும், லூக் ஜாங்வேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதில், வெஸ்லி 43 ரன்களும், வெஸ்லி 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர், ஆனாலும் அது ஜிம்பாப்வே அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால், ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது, மேலும் நேற்று கண்ட படுதோல்விக்கு திருப்பி கொடுத்து விட்டதை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…