வங்கதேச டெஸ்ட்தொடரில் ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு- வெளியான தகவல்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ள நிலையில் 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின்போது கைவிரலில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா திரும்பியுள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் விளையாடமாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
இதனால் டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்கு பதிலாக இந்தியா-ஏ அணிக்கு தலைமை வகிக்கும் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்றும், கேப்டன் ரோஹித் இல்லாததால் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்தலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடந்து வரும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் அபிமன்யு தொடர்ச்சியாக சதமடித்து வருகிறார். இதனால் அவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…