பலே கில்லாடி டிவில்லியர்ஸ்…ஆஸ்திரேலியா அணியை பந்தாடிய டிவில்லியர்ஸ்?வெற்றி கனியை தெ.ஆ.ருசித்தது எப்படி ?

Default Image

தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை  திருப்பி அடித்திருக்கிறது.டி வில்லியர்ஸ் மூன்று ஆண்டுகளுக்குப் பின்  டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். முதன்முறையாக இந்தத் தொடரில் டி வில்லியர்ஸை ஆஸ்திரேலிய பெளலர்கள் அவுட்டாக்கியிருக்கிறார்கள். தொடர் 1-1 சமநிலை அடைந்திருக்கிறது. கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை முதன்முறையாகத் தங்கள் மண்ணில்  டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு கணிந்திருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் களத்துக்கு வெளியிலும் அனல் அடித்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் செல்லும் வழியில் டி காக், டேவிட் வார்னர் பர்சனலாகத் திட்டிக்கொண்டது, இரு நாடுகளைக் கடந்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. போதாக்குறைக்கு ரன் அவுட் செய்துவிட்டு, கீழே விழுந்து கிடந்த டி வில்லியர்ஸ் அருகே நாதன் லியான் பந்தைப் போட்டுச் சென்று அவமதித்த பஞ்சாயத்தும் ஒரு பக்கம் சூடேற்றியது. `ஆஸ்திரேலியர்கள் எப்போதுமே அப்படித்தான்…’ எனத் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி பிரஸ் மீட்டில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றிருந்ததால், நாங்கள் யார்னு காட்றோம்’ எனும் முனைப்பில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. டர்பன் டெஸ்ட்டில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டனர்.பிரமாதமான ஆட்டத்தை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான நேரத்தில்  வெளிப்படுத்தினர்.

. ஆம்லாவுடன் போட்டி போட்டு நங்கூரம் போட்டார் எல்கர். ரன்ரேட் 1.65-ஐத் தாண்டவில்லை. இருவரும் இணைந்து 88 ரன்கள் எடுக்க சந்தித்த பந்துகள் 278. ஆம்லா 148 பந்துகளில் 56 ரன்களும், எல்கர் 197 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து `டெஸ்ட்னா இப்படித்தான் ஆடணும்’ என வகுப்பெடுத்துச் சென்றனர். கூடவே வெகு விரைவாக ஆல் அவுட் செய்துவிடலாம் என்ற ஸ்டீவ் ஸ்மித்தின் கனவில் மண் அள்ளிப் போட்டனர்.

பின்னர்  ஆம்லா, எல்கர், டு பிளெஸ்ஸி, டி ப்ரயுன், டி காக் என முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் பெவிலியன் திரும்பி விட்டனர். ஆனால், முந்தைய செஷன் போல இல்லை. இந்த முறை 110 ரன்கள் வந்திருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது.அசுர வேகத்தில் மிச்செல் ஸ்டார்க் பயமுறுத்திக்கொண்டிருந்தார். ஆனால், அதை அநாயசமாகக் கடந்து போய்க்கொண்டிருந்தார் ஒருவர். அவர் பெயர் டி வில்லியர்ஸ்.

எதிரணியின் கேப்டனிலிருந்து கிரிக்கெட் நிபுணர் வரை சொல்லும் வார்த்தை இது டி வில்லியர்ஸ் சாதாரண பேட்ஸ்மேன் இல்லை. ஏனெனில், அவர் களத்தில் ரிலாக்ஸாக இருப்பதில்லை. எதிரணியினரை ரிலாக்ஸாக இருக்க அனுமதிப்பதில்லை. அக்ரசிவ், பாசிட்டிவ் என அவ்வளவு எனர்ஜியுடன் இருப்பார். அவரிடம் வேகம் எடுபடாது, ஸ்பின் எடுபடாது, ரிவர்ஸ் ஸ்விங் எடுபடாது. வாய்ப்புக் கிடைத்தால் முதல் பந்திலிருந்தே அடிக்க ஆரம்பித்து விடுவார். அது எந்த பெளலராக இருந்தாலும் சரி, எந்த வேகத்தில் வந்தாலும் சரி, எந்த லைனில் வந்தாலும் சரி, எந்த லென்த்தில் விழுந்தாலும் சரி… அடிக்க நினைத்தால் அடி.

அப்படித்தான் வந்ததும் வராததுமாக மிச்செல் ஸ்டார்க் பந்தில் ஒரு கவர் டிரைவ் அடித்தார். அதே சூட்டோடு ஒரு ஃபுல் ஷாட். பந்து ஸ்கொயர் லெக் பக்கம் இருந்த கயிற்றைத் தாண்டி உருண்டது. பேட் கம்மின்ஸ் பந்தில் ஒரு ஸ்கொயர் கட், ஒரு ஃபுல் ஷாட், ஒரு ஆன் டிரைவ் என ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து வெரைட்டி காட்டினார். ஸ்டீவ் ஸ்மித் தலைமேல் கை வைத்தார். புதிய பந்தை எடுத்தார். அதை நாதன் லியான் கையில் கொடுத்தார். `ஓ ஸ்பின்னா… வரட்டும் வரட்டும்’ என அதையும் வெளுத்துக் கட்டினார். கண்ணுக்கு குளிர்ச்சியாக ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் தட்டிவிட்டார். டி வில்லியர்ஸ் மறு அவதாரம் எடுத்தார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்கா 263/7 (டி வில்லியர்ஸ் 74, பிலாந்தர் 14).

டி வில்லியர்ஸ் மறுநாள் எப்படியும்  சதம் அடித்து விடுவார் என எதிர்பார்த்தனர். அது நடந்தது. பேட் கம்மின்ஸ் பெளன்ஸராக வீசியதை அலட்டாமல் தேர்ட் மேன் ஏரியாவில் பவுண்டரி தட்டிவிட்டு சதம் கடந்தார் டி வில்லியர்ஸ். வர்ணனையில் இருந்த கிரீம் ஸ்மித் வர்ணனை செய்வதை மறந்து பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தார். இருக்காதே பின்னே…! 2015 ஜனவரிக்குப் பின் முதன்முறையாக டி வில்லியர்ஸ் டெஸ்ட்டில் சதம் அடிக்கிறார். சர்வதேச அரங்கில் 22-வது சதம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6-வது சதம். வாட் டே இன்னிங்ஸ்… வர்ணனையாளர்கள் புகழ்கின்றனர். ஆம், என டேவிட் வார்னரும் கைதட்டி ஆமோதிக்கிறார். வாட் டே பிளேயர். ட்விட்டர் பாராட்டுகிறது. எல்லோரும் தடுமாறும்போது எழுந்து நிற்பது டி வில்லியர்ஸ் பியூட்டி. மற்றவர்கள் எல்லாம் ரிவர்ஸ் ஸ்விங்கில் தடுமாறியபோது அதை வெளுத்துக்கட்டி அடித்த இந்த சதம், டி வில்லியர்ஸின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் இன்னிங்ஸ். இரண்டாவது இன்னிங்ஸில் டி வில்லியர்ஸ் அதிக நேரம் களத்தில் இல்லை என்றாலும், ஹேஸில்வுட் பந்தில் அடித்த அந்த ஒரு ஸ்ட்ரெய்ட் டிரைவ் போதும். அதெல்லாம் ஜீனியஸ்களுக்கு மட்டுமே உரித்தான ஷாட் ஆகும்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live today
rain thunder
Kane Williamson
PM Modi
FisherManRescue
Hemant Soran
Balachandran