காட்டடி அடித்த ஏபி டிவில்லியர்ஸ் .., டெல்லிக்கு 172 ரன்கள் இலக்கு..!
பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி – பெங்களூர் அணிகள் மோதிவருகிறது. இந்த போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைதொடர்ந்து, பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே விராட் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, ரஜத் பாட்டீதர் களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் படிக்கல் 17 ரன்னில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர், மேக்ஸ்வெல், ரஜத் பாட்டீதர் இருவரும் ஓன்று சேர்ந்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் 25 ரன்கள் இருக்கும்போது ஸ்மித்திடம் கேட்சை கொடுத்தார். சிறப்பாக விளையாடி வந்த ரஜத் பாட்டீதர் 30 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப அடுத்து இறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசி 75* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர்.
அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் மட்டுமே 22 ரன்கள் விளாசினார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். 172 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.