முதல் முறையாக ஏ.பி.டிவில்லியர்சை பந்து வீச்சில் வீழ்த்தியது மகிழ்ச்சி …..
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி எங்களை அனைத்துப் பிரிவுகளிலும் முறியடித்து விட்டது.அணிகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் ஏ.பி.டிவில்லியர்ஸ். ஆனாலும் நாங்களும் வெகுதொலைவில் இல்லை. முதல் இன்னிங்ஸில் 75 ரன்கள் 2வது இன்னிங்சில் ஒரு 50 ரன்கள் இடைவெளி, ஆட்டம் எந்தப் பக்கமும் சென்றிருக்க வாய்ப்பிருந்தது.
ரபாடா பந்து வீச்சு தனித்துவமாக அமைந்தது, மிகச்சிறப்பாக வீசினார். நேற்று காலை உண்மையில் கடினமாக அமைந்தது. அவர்களை விரைவில் வீழ்த்துவோம் என்று நினைத்தோம்.
அவர்கள் முன்னிலையை 50 ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். 140 ரன்கள் மிகப்பெரிய முன்னிலை.
இந்தத் தொடரில் ஏ.பி.டிவில்லியர்சை முதல் முறையாக பந்து வீச்சில் வீழ்த்தியது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
இவ்வாறு கூறினார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.