கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று ஆரோன் பிஞ்ச் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து ஆரோன் பிஞ்ச் கூறியது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் எப்போது இணைவேன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர்.
அந்த வீரர்களுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டாலும் பெங்களூரு அணிக்காக ஆடுவதே என்னை பொறுத்தவரை பெரிய விஷயம் தான்.
இந்நிலையில் மேலும் விராட் கோலியின் தலைமையின் கீழ் முதல்முறையாக கிரிக்கெட் ஆட உள்ளேன் , இதுவே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது , மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் மேலும் அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் பல ஆண்டுகளாக விளையாடி இருக்கிறேன்.
நான் அப்பொழுதே அவரது அணியை ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக வழிநடத்துவார் அதை நான் கவனித்துள்ளேன் மேலும் அவரது கேப்டன்ஷிப்பை அருகில் இருந்து கவனித்து ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். தொடக்க வீரராக களம் இறங்கி என்னால் கேப்டன் விராட் கோலியின் நெருக்கடியை குறைக்க முடியும் என்றும் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…