டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான ஆரோன் பின்ச், கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. அதில் ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், டி-20 போட்டிகள் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டி, சவுதம்ட்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் ஆள் ரவுண்டான ஆரோன் பின்ச், பிஞ்ச் 32 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்து, டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார். இவர் மொத்தமாக 62 இன்னிங்ஸ் ஆடி, 2000 ரன்களை கடந்தார். முதலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். அவர் மொத்தம் 56 போட்டிகள் மட்டுமே ஆடியது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…