என்னங்க பேட்டிங் இது? லக்னோவை விளாசி தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Published by
பால முருகன்

சென்னை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில், லக்னோ அணி பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார்.

மே 14-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208  ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்தது பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” டெல்லி அணிக்கு எதிராக லக்னோ பேட்டிங் செய்தது எனக்கு சுத்தமாக புரியவில்லை. என்ன பேட்டிங் செய்கிறீர்கள் நீங்கள் என்று நான் கேட்கிறேன்.

தொடக்கத்தில் வந்த குயின்டன் டி காக் ரன்கள் அடிக்கவில்லை, கே.எல். ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு, (மார்கஸ்) ஸ்டோனிஸ் வந்தார், அவர் நடுவில் சிக்கினார். தீபக் ஹூடா பூஜ்ஜியத்திற்கு வெளியேறினார். தொடர்ச்சியாக இப்படி விக்கெட்களை இழந்தால் நன்றாகவா இருக்கு? எப்படி இப்படி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறீர்கள்? நிக்கோலஸ் பூரன் இருக்கும் வரை, போட்டி உயிருடன் இருந்தது.

அவருடைய அதிரடியான ஆட்டம் காரணமாக தான் இந்த அளவுக்கு சென்று தோல்வி அடைந்தீர்கள். இருந்தாலும் நீங்கள் அடிக்க வேண்டிய டார்கெட் ரொம்ப பெரியது இல்லை எனவே விக்கெட்களை விடாமல் விளையாடி இருந்தாலே இந்த இலக்கை ஈசியாக அடித்து இருக்கலாம். மோசமான பேட்டிங் காரணமாக தான் லக்னோ அணி தோல்வி அடைந்து விட்டது” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

14 minutes ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

34 minutes ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

45 minutes ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

2 hours ago

பிரதமர் மோடி முதல்… தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

2 hours ago

அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago