டிரென்ட் போல்ட்க்கு எதுக்கு 2 ஓவர்? ராஜஸ்தான் தோல்வியால் கடுப்பான ஆகாஷ் சோப்ரா!!

Aakash Chopra and Trent Boult

ஐபிஎல் 2024  : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டிரென்ட் போல்ட்க்கு 2 ஓவர் கொடுத்தது தவறு என ஆகாஷ் சோப்ரா  கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுவரை ஒரு போட்டியில் கூட இந்த சீசனில் தோல்வி அடையாமல் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் முதன் முதலாக தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது பற்றி பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” போட்டியில் தோல்வி அடைந்தது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால், போட்டி என்றால் வெற்றி தோல்வி எல்லாம் சஜகமான விஷயம் தான். எனக்கு என்ன புரியவில்லை என்றால் ஏன் டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார்? என்பது தான். அவரை போல இரு சிறந்த பவுலரை நீங்கள் அணியில் வைத்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

நீங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கிச் சென்றீர்கள் அதனை நான் தவறாக சொல்லமாட்டேன். ஆனால், இவ்வளவு பெரிய ரன்களை அடித்துவிட்டு எதிரணியை மடக்க வேண்டும் என்றால் டிரென்ட் போல்ட் போன்ற பந்துவீச்சாளர்களை பந்துவீச வைக்கவேண்டும். ஆரம்பத்தில் குல்தீப் சென் மூன்று விக்கெட்டுகளை எடுத்ததார்.  நான் அதனை பாராட்டுவேன். இருப்பினும், 4 ஓவர்களில் அதிகமான ரன்கள் கொடுத்தார்.

ஆனால், டிரென்ட் போல்ட் 2 ஓவர்கள் பந்துவீசி மொத்தமாக 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கண்டிப்பாக இன்னும் இரண்டு ஓவர்கள் அவரை பந்துவீச அனுமதித்து இருக்கலாம் ஆனால், அதனை நீங்கள் செய்யவில்லை. இது என்னை பொறுத்தவரை தவறான விஷயம் என்று நான் நினைக்கிறன்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்