ஹர்திக் பாண்டியா மட்டும் இல்லனா அவ்வளவுதான்! மும்பை வெற்றிக்கு ஆகாஷ் சோப்ரா கருத்து!

Aakash Chopra About hardik pandya

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் அணிக்கு அவ்வளவு ரன்கள் வந்து இருக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். இதன் பிறகு 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தனர்.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி  29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார். மும்பை அணி வெற்றிபெற்றாலும் ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடினார் என்ற விமர்சனமும் ஒரு பக்கம் எழுந்ததது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா அப்படி விளையாடியது சரிதான் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது சில தடுமாற்றங்கள் இருந்தது. சரியாக சொல்லவேண்டும்  என்றால் ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து இஷான் கிஷனும் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 121/4 என்ற நிலையில் இருந்தனர்.

அந்த நேரத்தில் சரியான பேட்டிங் பொறுமையாக விளையாடினாள் தான் ரன் வந்து இருக்கும் எனவே, அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா வந்தார். பொறுமையாக விளையாடி கொண்டு இருந்தார். திலக் வர்மாவும் அவுட் ஆனதால்  மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது அதன் பிறகு டிம் டேவிட்டுடன் பாண்டியா இணைந்து விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்  கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடினார் என்று சிலர் சொல்கிறார்கள்.

நானும் சொல்கிறேன் அவர் மெதுவாக தான் விளையாடினார் ஆனால், அவருடைய அந்த மெதுவான ஆட்டம் தான் அணிக்கு தேவைப்பட்டது. நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நேரத்தில் அவர் தான் நிதானமாக விளையாடினார். அந்த நேரத்தில் அவரும் அட்டமிழந்து இருந்தால் கண்டிப்பாக அணிக்கு ரன்கள் வந்து இருக்காது. போட்டியில் அவர் மட்டும் இல்லை என்றால் அவ்வளவு தான் பார்ட்னர்ஷிப்  கூட இல்லாமல் அணி அழுத்தத்தில் விளையாடி இருக்கும்.

அந்த அழுத்தம் கொண்டு வராமல் இருந்தது ஹர்திக் பாண்டியா  அடித்த ரன்கள் தான் காரணம். அவருடைய விளையாட்டு நன்றாக இருந்தது அதைபோல மற்ற வீரர்களும் நன்றாக விளையாடினார்கள். மும்பை அணி இந்த சீசனில்  முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்