ஐபிஎல் 2024 : ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸை தேர்வு செய்யவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் இடம்பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசியஅவர் ” வில் ஜாக்ஸ் வெளியில் பெஞ்சில் தான் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்னை பொறுத்தவரை அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கூட அவர் மிகவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். க்ளென் மேக்ஸ்வெல்லை விட்டுவிடுங்கள். அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸைக் கொண்டு வந்து விளையாட வையுங்கள். நாம் வார்த்தையால் இதனை சொல்வது ஈஸி தான். ஆனால் ஆர்சிபி நிர்வாகம் இதனை செய்யுமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், இதே மைதானத்தில்தான் கிளென் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றைக் காலில் நின்று 200 ரன்கள் எடுத்தார் அந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. எனவே, இந்த மைதானம் அவருக்கு ரசியானதாக இருப்பதால் கூட அவரை கண்டிப்பாகவே இன்று நடைபெறும் போட்டியில் விளையாட வைக்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
கடந்த சில போட்டிகளாக மேக்ஸ்வெல் ஆட்டம் பெரிய அளவில் இல்லை. இருப்பினும் மேக்ஸ்வெல் மீது அதிகம் நம்பிக்கை வைத்து கண்டிப்பாக அவர் திரும்பி பழைய பார்முக்கு வருவார் என அவருக்கு வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். என்னை பொறுத்தவரை மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ்க்கு வாய்ப்பு கொடுக்கலாம்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…