Rishabh Pant : ரிஷப் பண்ட் முடிந்த அளவிற்கு விரைவாக வருகை தந்து விளையாடவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அட்டகாசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி மொத்தமாக 371 ரன்கள் குவித்து இருக்கிறார். கார் விபத்தில் சிக்கி இருந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்பிய நிலையில், இந்த சீசன் அவருக்கு நல்ல சீசனாக அமைந்து இருக்கிறது.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என விளாசி வரும் ரிஷப் பண்ட் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக களத்திற்கு வந்து விளையாடவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரிஷப் பண்ட் ரொம்பவே பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர். அவருடைய பேட்டிங் வர வர என்னை வெகுவாக கவர்கிறது.
மும்பை அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ரிஷப் பண்ட் அவுட் ஆனது எனக்கு ரொம்பவே வேதனையை கொடுத்தது. அந்த போட்டியில் அவர் நம்பர் 5-வது இடத்தில் இறங்கி விளையாடினார். அந்த இடத்தில் அவர் இறங்கியது சரியானதாக இல்லை. எனவே, இனிமேல் அவர் அந்த இடத்தில் இறங்கவே கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.
அந்த போட்டியில் ஒரு ரிஷப் பண்ட் சீக்கிரமாக இறங்கினால் இன்னுமே அவர் நிறைய ரன்கள் அடித்து இருப்பாரோ என்று எனக்கு தோணுகிறது. என்னை பொறுத்தவரை முடிந்த அளவுக்கு ரிஷப் பண்ட் விரைவாகவே களத்திற்கு வருகை தந்து பேட்டிங் செய்யவேண்டும். தாமதமாக வரக்கூடாது என்னுடைய ஆசையும் கோரிக்கையும் அது தான். வருகின்ற போட்டிகளில் தயவுசெய்து ரிஷப் பண்ட் இதனை செய்யவேண்டும்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…