virat kohli FAN [File Image]
Virat Kohli Fan : விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இந்த போட்டியின் போது விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் வந்து விராட் கோலியின் கால்களில் விழுந்தார். விழுந்த ரசிகரை எழுப்பி விராட் கோலி கட்டியணைத்தார். இந்த வீடியோ அந்த சமயம் வெளியாகி வைரலாக பரவி வந்த நிலையில், பலரும் ரசிகரிடம் விராட் கோலி நடந்து கொண்ட விதத்தை பாராட்டி இருதார்கள்.
ஆனால், அந்த ரசிகர் விராட் கோலியை சந்தித்த பிறகு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதுகாவலர்களை மீறி அந்த ரசிகர் மைதானத்திற்குள் சென்று கோலியின் காலில் விழுந்ததால் அந்த ரசிகர் கோலியை சந்தித்த பிறகு பாதுகாவலர்கள் மைதானத்திற்கு வெளியே இழுத்து சென்று கடுமையாக தாக்கினார்கள்.
அந்த ரசிகர் பாதுகாவலர்கள் அடித்த வலியில் தாங்க முடியாமல் கதறி அழுகிறார். பிறகு அங்கு இருந்த ஒருவர் பாதுகாவலர்களை அடிக்கவேண்டாம் என்று கூறிவிட்டு ரசிகரை வெளியே அழைத்து சென்றாரா. விராட் கோலி ரசிகரை இரண்டு பாதுகாவலர்கள் தாக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒருவரை தாக்கும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…