ஐபிஎல் 2024 : ஐபிஎல்லில் மும்பை அணி வீரர்கள் 3 தோல்விக்கு பிறகு சுற்றுலா சென்று வந்ததை மும்பை அணி X தளத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை முதல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் நிர்வாகம் மும்பை வீரர்களுக்கு தொடர் தோல்வியின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஜாம்நகரருக்கு சுற்றுலா செல்லவைத்துள்ளனர்.
அந்த வீடியோவையும் மும்பை அணி நிர்வாகம் தங்களது X தளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரோஹித் ஷர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் கட்டி அனைத்து ஒன்றாக மகிழ்ச்சியாக சுற்றுலாவை களிக்கும் வகையில் இருக்கிறது. இதை கண்ட சில உண்மையான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் போட்டியை வெற்றி பெறாமல் எதற்கு இப்படி சுற்றுலா ? என்று கேலி செய்தும் வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு பிறகு அடுத்த 6 நாட்கள் போட்டிகள் இல்லாமல் இருப்பதால். இந்த ஆறு நாள் இடைவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜாம்நகரில் சுற்றுலா சென்றதாக தகவல் வெளியாகி வந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் இன்று அவர்கள் சுற்றுலா சென்ற வீடியோவை சமூகத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியானான வலுவான மும்பை அணிக்கு இந்த ஆண்டு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால், இது மும்பை அணிக்கு புதிதான விஷயம் இல்லை, இதற்கு முன் ஒரு ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இது போல முதலில் 5 போட்டிகளில் தோல்வியை பெற்று அதன் பிறகு அந்த தொடரில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…