இந்தியாவின் டெஸ்ட் தரவரிசைக்கு ஆபத்தா? காரணங்கள் இதுதான்!

Indian Test Cricket Team

சென்னை : இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக உள்ள டெஸ்ட் தொடரில் தோல்வியைக் கண்டால் டெஸ்ட் தரவரிசையைப் பாதிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் (WTC) அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா அணி 68% வெற்றி சதவிகிதங்கள், 74 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 2 இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடிய இந்திய அணியால் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கூடப் பெறமுடியவில்லை.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் அதாவது 2023- 2025க்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது நடைபெற உள்ளது. இதில் இறுதிப் போட்டியில் எந்த அணிகள் இடம்பெறப் போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு என்பது கூடி வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி ஒன்று தான், அது என்னவென்றால் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் அந்த அணிகள் டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடத்தை பிடிக்க வேண்டும்.

அதன்படி, முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கையில் தற்போது வரை தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு ஆபத்து இல்லை. இந்த பட்டியலில் இந்திய அணி (74 புள்ளிகள்) முதலிடமும், ஆஸ்திரேலிய அணி (90 புள்ளிகள்) 2-ஆம் இடமும், நியூஸிலாந்து அணி (36 புள்ளிகள்) 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர். வங்கதேச அணி (24 புள்ளிகள்) இந்த பட்டியலில் 6-ஆம் இடம் வகித்து வருகிறது.

இந்திய அணியின் ஆபத்தும், காரணமும் ..!

இந்த நிலையில், வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிராக வரும் செப்.19-ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஒருவேளை இந்திய அணி தோல்வியைக் கண்டால் தரவரிசையில் பெரிதளவு மாற்றம் ஏற்பட்டு விடும். இதனால், இந்திய அணி தனது முதலிடத்தை இழப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளது.

அதாவது, வங்கதேசத்துடன் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. ஐசிசி தர அரிசியைப் பொறுத்த வரையில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றால் 12 புள்ளிகளும், ட்ரா ஆனால் 4 புள்ளிகளும், போட்டி நடைபெறவில்லை என்றால் 6 புள்ளிகளும் வழங்குவார்கள். அதே போல ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், அந்த தோல்விக்கு ஏற்ப புள்ளிகள் குறைக்கப்படும்.

இதனால், இந்த 2 போட்டிகளை இந்திய அணி தோல்வி பெற்றால், புள்ளிகள் குறைந்து விடும். மேலும், வங்கதேச அணி தற்போது 24 புள்ளிகளில் இருக்கிறது, இதனால் 2 போட்டியை வெற்றி பெற்றால் 48 புள்ளிகள் பெற்று, 2-ஆம் பிடித்து விடுவார்கள். தற்போது, 2-ஆம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்திய அணி அந்த முதலிடத்தை இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனக் கருதுகிறார்கள்.

வங்கதேச அணி வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி உள்ளனர். இதனால், வங்கதேச அணி இந்திய அணிக்கு இந்த தொடரில் மிகவும் கடினமான போட்டியாளராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தால் தரவரிசையில் இது போல மாற்றம் நிலவும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்