‘சூர்யகுமார் மாதிரி ஒரு சிக்ஸர் அடிச்சாரே ..’ ! யார் இந்த ரகுவன்ஷி ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்காக பேட்டிங் களமிறங்கிய இளம் வீரரான அங்கீரிஷ் ரகுவன்ஷியை பற்றி பார்ப்போம்.

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மட்டும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணிக்காக பேட்டிங் செய்ய இந்தியாவை சேர்ந்த இளம் வீரரான அங்கீரிஷ் ரகுவன்ஷி களமிறங்கினார்.  ஏற்கனவே களத்தில் சுனில் நரேன் அதிரடி காட்டி கொண்டிருக்கையில் களத்திற்கு வந்த ரகுவன்ஷி அவருடன் இணைந்து அதிரடி காட்ட தொடங்கினார். அவரது அதிரடியில் அவர் 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 ஃபோர்களும் அடங்கும்.

அங்கீரிஷ் ரகுவன்ஷி, புது டெல்லியில் பிறந்து சிறு வயதிலே சிறந்த கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக மும்பைக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டர். அங்கு அவர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேனாக  இளம் பேட்டர்களில் ஒருவராக தயாரானார். மேலும், அவரது முயற்சிகள் அவரை நல்ல ஒரு பேட்ஸ்மேனாக தயார் செய்தது. அதனை தொடர்ந்து 19 -வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக தேர்வானார்.

அந்த தொடரில் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் 120 பந்துகளில் 22 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 144 ரன்கள் எடுத்திருந்தார்.  அதன் பின் ஐபிஎல் 2024 ஏலத்தின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அங்கீரிஷ் ரகுவன்ஷியை  20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தனர். நேற்றைய போட்டியில் அவர் 25 பந்துகளில் அரை சதம் விளாசிய போது ஒட்டுமொத்த கொல்கத்தா அணி வீரர்களும் எழுந்து நின்று கைதட்டினர். மேலும், அவரது விளையாட்டின் பாணி அப்படியே சூர்யகுமார் யாதவை போல உள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதிலும், நேற்றைய போட்டியில் 10.4 -வது ஓவரில் டெல்லி அணியின் ரஷிக் ஆப் சைடில்  போடப்பட்ட பந்தை திரும்பி நின்று தேர்ட்-மேன் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார். அவர் அடித்த அந்த சிக்ஸர் வீடியோவை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். இதே போல அவர் தனது ரன்-ஸ்கோரிங் ஃபார்மைத் தொடர முடிந்தால், விரைவில் டி20 வடிவத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Recent Posts

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

25 minutes ago

Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்… பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…

51 minutes ago

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

2 hours ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

2 hours ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

3 hours ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

4 hours ago