டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் புதிய சாதனை படைத்துள்ளார்.
மலேசியாவில் 4 நாடுகளுக்கிடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. மலேசியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்று அவரும் இந்த டி-20 தொடரில் பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இன்று மோதின.
இந்த போட்டியில் பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் டி-20 வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஸ்வான், சிங்கப்பூர் அணிக்கு எதிரான 18 ஆவது ஓவரில் 3,4, 6ஆவது பந்துகளில் விக்கெட்டும், அடுத்து 20ஆவது ஒவரிலும் தொடர்ச்சியாக முதல் இரண்டு பந்துகளில் விக்கெட் எடுத்து 6 பந்துகளில் மொத்தமாக 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
முதலில் பேட் செய்த சிங்கப்பூர் அணி, 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஹ்ரைன் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…