சென்னை : டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது வங்கதேச அணி அமெரிக்கா அணியுடனான மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்களாதேச அணி ஒரு சீரான தொடகத்தயே வெளிப்படுத்தியது.
வங்கதேச அணியில் டவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் தனி ஆளாக நின்று மெதுவாக ரன்களை உயர்த்தினார். இவர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் மொத்தம் 47 பந்துக்கு 58 ரன்கள் எடுத்திருந்தார். இவருக்கு அடுத்த படியாக மஹ்முதுல்லா 22 பந்துக்கு 31 ரன்கள் எடுத்திருந்தார்.இறுதியில், வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தனர். அமெரிக்கா அணியில் ஸ்டீவன் டெய்லர் மிகச்சிறப்பாக பந்து வீசி 3 ஓவருக்கு 9 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
அதனை தொடர்ந்து இலக்கை அடைய பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்கா அணி ஒரு வலுவான தொடக்கம் அமையாமல் திணறினார்கள். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் 6-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்த கோரி அண்டர்சனும், ஹர்மீட் சிங்கும் சிறப்பாக விளையாடி வங்கதேச பந்து வீச்சை சமாளித்து அமெரிக்கா அணியை 19.3 ஓவரில் கரை சேர்த்தனர்.
இதனால் அமெரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோரி அண்டர்சன் 25 பந்துகளில் 34 ரன்களும், ஹர்மீட் சிங் 13 பந்துக்கு 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வங்கதேச அணியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 போட்டியானது நாளை (மே-24) இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…