இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா ..? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி தனது உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நாளை மறுநாள் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில், போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்-க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சோதனை செய்த பின் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால், சுப்மன் கில் இல்லாமல் கூட வரும் போட்டிகளில் இந்திய அணி களம் இறங்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் முதல் போட்டியில் சுப்மன் கில் விளையாட முடியுமா..? இல்லையா..? என்ற நிலைமை இன்று நடைபெறும் 2-வது சோதனைகளுக்குப் பிறகு அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவ குழு சுப்மன் கில்லின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நேற்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற வலை பயிற்சியில் கூட சுப்மன் கில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுப்மன் கில் விளையாட முடியாவிட்டால், முதல் போட்டியில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா உடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற பெரிய கேள்வி..? எழுந்துள்ளது. இதனால் இந்த முக்கியமான போட்டியில் சுப்மன் கில் பதிலாக ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்கலாம். இல்லையென்றால் கே.எல்.ராகுல் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. சுப்மன் கில் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிகபட்சமாக 890 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையிலும் 302 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 1917 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் விளாசியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஒருநாள் போட்டியில் அவர் அணியில் இடம் பெறுவது மிகவும் முக்கியம். 11 சர்வதேச டி20 போட்டிகளில், சுப்மான் கில் 304 ரன்கள் எடுத்துள்ளார். 18 டெஸ்ட் போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் கில் 966 ரன்கள் எடுத்துள்ளார்.
சுப்மன் கில் இந்திய அணியில் இருந்து வெளியேறினால் அது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக அமைய வாய்ப்புள்ளது. முன்னதாக இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் காயத்திற்குப் பிறகு அணியில் இணைந்துள்ளனர். சமீபத்தில் பும்ரா, கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிய கோப்பையின் போது கூட சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் காயம் அடைந்ததால் ரவிச்சந்திரன் அஷ்வின் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் உலகக் கோப்பை அட்டவணை:
அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியா
அக்டோபர் 11-ம் தேதி ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 14-ம் தேதி பாகிஸ்தான்
அக்டோபர் 19-ம் தேதி வங்கதேசம்
அக்டோபர் 22-ம் தேதி நியூசிலாந்து
அக்டோபர் 29-ம் தேதி இங்கிலாந்து
நவம்பர் 2-ம் தேதி இலங்கை
நவம்பர் 5 -ம் தேதி தென்னாப்பிரிக்கா
நவம்பர் 12-ம் தேதி நெதர்லாந்து
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…