சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக விலகிய கைல் ஜேமிசனுக்கு பதிலாக, தென்னாப்பிரிக்காவின் சிசண்டா மகலா ஒப்பந்தம்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நியூசிலாந்து அணியைச்சேர்ந்த கைல் ஜேமிசன், ரூ.1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சற்று முன்பு மீண்டும் மீண்டும் குறைந்த முதுகில் அழுத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் வரவிருக்கும் ஐபிஎல் உட்பட பல மாதங்கள் அவர் கிரிக்கெட் விளையாடமுடியாது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி, ஜேமிசனுக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கடந்த மினி ஏலத்தில் முதலில் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக சிறப்பாக விளையாடி 14 விக்கெட்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். இவர் தற்போது ஐபிஎல் மினி ஏலத்தின் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தமாகிறார். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியில் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியை குஜராத் அணிக்கு எதிராக மார்ச்-31இல் விளையாடுகிறது.<
/p>
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…