டி20 யில் புதிய மைல்கல் !! சேஸிங்கில் பஞ்சாப் செய்த சாதனை ..!!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பவுலர்களை துவம்சம் செய்தனர். இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு முறை கொல்கத்தா அணி 250+ ரன்களை பதிவு செய்தது.
அதாவது 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்தது 261 ரன்களை எடுத்தது. இது போன்ற இமாலய இலக்கை நிர்ணயிப்பது இந்த ஐபிஎல் தொடரில் இது புதிதல்ல அதை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோவ் மற்றும் ஷஷாங்க் சிங் அதிரடியால் இந்த இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று டி20 போட்டிகளில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளனர்.
அதாவது ஒரு டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த சாதனையை பஞ்சாப் அணி நேற்றைய போட்டியில் படைத்தது. இதற்கு முன் டி20 போட்டிகளில் 259 என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சேஸ் செய்ததே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.
சர்வ்தேச டி20 போட்டி, உள்ளூர் டி20 போட்டி என ஒட்டு மொத்தமாக டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த முதல் 4 பட்டியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
அதிக ரன்களை சேஸ் செய்த அணிகள்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது, 262 என்ற இலக்கை எட்டியுள்ளனர். இதில் 2-வது அணியாக 2023 ஆண்டில் நடந்த ஒரு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 259 என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்தனர். இந்த பட்டியலில் 3-வது அணியாக இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் ‘டி20 ப்ளாஸ்ட்’ தொடரில் மிடில்செக்ஸ் அணியினர், சர்ரே அணியினருக்கு எதிராக 253 ரன்கள் இலக்கை எட்டியுள்ளனர்.
இதில் 4-வது அணியாக 244 என்ற இலக்கை 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளனர். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் என்பது சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதனால் 262 மட்டும் இல்லை 280 ரன்கள், ஏன் 300 ரன்கள் எட்டுவது கூட பெரிய விஷயமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.