‘இலங்கை தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பார்’ ஜெய்ஷா திட்டவட்டம் ..!

Jay Sha ,Secretary of BCCI

ஜெய்ஷா : கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் ட்ராவிடின் பதவி காலம் இந்த நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் கம்பிர் தான் கிட்டதட்ட உறுதியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ எப்போது அறிவிப்பார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ‘ஜெய்ஷா’ டெலிகிராப் பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த சில முக்கிய அறிவிப்பை கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு இதே கேப்டன் தலைமையில் தோல்வியடையாமல் இறுதி போட்டி வரை வந்து அங்கு ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியதால் நாம் தோல்வி அடைந்தோம்.

ஆனால், இந்த முறை இன்னும் கடினமாக உழைத்து கோப்பையை வெல்ல சிறப்பாக விளையாடினோம். ரோஹித் முதல் விராட் வரை அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த உலகக்கோப்பையில் அனுபவம் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தியிருக்கிறது” என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய ஜெய்ஷா பயிற்சியாளர் குறித்த ஒரு அப்டேட்டையும் கூறி இருந்தார்.

“இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் என இருவரும் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். CAC நேர்காணல் செய்து 2 பெயர்களை தேர்வு செய்துள்ளது. அதுவரை வரும் ஜூலை- 6ம் தேதி நடைபெற உள்ள ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செல்கிறார், அதன்பின் ஜூலை-27 ம் தேதி இலங்கை தொடரில் இருந்து புதிய பயிற்சியாளர் இந்தியா அணியுடன் இணைவார்” என்று டெலிகிராப் பத்திரிகைக்கு பேசிய அவர் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்