வரலாற்றில் புதிய சாதனை ..! ஆப்கான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது தென்னாபிரிக்கா ..!

SAvAFG , Semi Final 1

டி20I அரை இறுதி: இந்த ஆண்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியது.

இன்று காலை நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்யவும் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

வழக்கமாக ஐசிசி தொடரின் முக்கிய போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி சோக் (Choke) செய்வார்கள் ஆனால், இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சோக் செய்தார்கள் என்றே கூறலாம்.

தென்னாபிரிக்கா அணியின் மிரட்டலான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணியால் ஒரு பவுண்டரியை கூட எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். முக்கியமாக விக்கெட்டுகளை அடுத்தடுத்து அதிரிச்சியும் அளித்து வந்தனர்.

11.5 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மாட்டும் எடுத்தது.  லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம் என மிரட்டலாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இன்று முற்றிலும் சொதப்பியது.

சிறப்பாக பந்து வீசிய தென்னாபிரிக்கா அணியில் ஜான்சனும், ஷாம்சியும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதன்பின் எளிய இலக்கை எடுப்பதற்கு தென்னாபிரிக்கா அணி பேட்டிங் களமிறங்கியது.

தொடக்கத்தில் டிகாக் விக்கெட்டை மட்டுமே இழந்த தென்னாபிரிக்கா அணி அதன் பிறகு ஜோடி சேர்ந்த  ரீசா ஹென்ட்ரிக்ஸ்ஸும், ஐடன் மார்க்ராமும் அவசரம் கொள்ளாமல் விக்கெட்டையும் இழக்காமல் 8.5 ஓவர்களில் இந்த எளிய இலக்கை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்