அமெரிக்காவில் விராட் கோலியின் பிரம்மாண்ட சிலை..! வைரலாகும் வீடியோ.!

விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பின்பற்றும் இளைஞர்கள் உலகம் முழுவதுமே உள்ளனர். இதனாலே கிரிக்கெட் ரசிகர்களால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியே இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு விராட் கோலியின் ஒரு பிரமாண்டமான சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது.

அவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சரிவர விளையாடும் இருக்கிறார். இதனால் பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரது ரசிகர்கள் அவரை ஊக்குவித்துக் கொண்டே அவருக்கு பக்கபலமாகவே தான் இருக்கிறார்கள்.

தற்போது, விராட் கோலிக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) என்ற இடத்தில் பிரமாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது மனிதனை விட பல மடங்கு உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் இந்த ப்ரமாண்ட சிலையை கட்டில், மெத்தை உற்பத்தி செய்யும் டுரோஃபிளேக்ஸ் (Duroflex) நிறுவனம் அமைத்துள்ளது.

அந்நிறுவனத்தின், பிராண்ட் அம்பாசிடர் விராட் கோலி என்பதால் அவரது சிலையை நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத்திற்காக நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். டுரோஃபிளேக்ஸ் நிறுவி உள்ள அவரது ப்ரமாண்டமான இந்த சிலையின் புகைப்படங்களும், வீடியோவும் வைரலாக இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்