ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதியது.
இந்த போட்டியில் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஃபின்ச் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஃபின்ச் 29 ரன்னுடன் வெளியேறினார்.
இதைதொடர்ந்து, இறங்கிய விராட் கோலி சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர், களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 51 ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.
மேலும் அதற்கு பிறகு பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 19.4 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் இதன் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியிலே வெற்றியை சந்தித்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய ஏபி டிவில்லியர்ஸ், கடினமாக பயிற்சி பெற்று கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி தருகிறது. மேலும் நாங்கள் இந்த போட்டியில் சரியான மாற்றங்களை கொண்டு வந்தோம் மேலும் எனக்கு வயது 36 நான் இந்த வயதில் விளையாடுகிறேன் என்று எனக்கே சந்தேகம் ஏற்படுத்தும் ஆனால் சரியான பயிற்சியும் முறைப்படியான கடின உழைப்பு இருந்தால் கண்டிப்பாக நிச்சயமாக விளையாடலாம் .
நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய படிக்கல் மிகவும் அருமையாக விளையாடினார். மிகவும் திறமைசாலி என்று நிரூபித்துவிட்டார்.
மேலும் பெங்களூர் அணிக்கு புதிதாகக் கிடைத்திருக்கும் ஒரு நல்ல இளம் கிரிக்கெட் வீரர் ஆவார். மேலும் பார்த்தவுடன் பேசவும் கொஞ்சம் வெட்கப்படுகிறார், ஆனால் சிறிது காலம் மட்டுமே அந்த மாதிரி இருக்கும் என்று சிரித்துக்கொண்டே ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…