kolkata knight riders fan [file image]
சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மே 11-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக 16 ஓவர்கள் வைத்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அப்போது. கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 என்ற இலக்கை எடுத்தது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது சிக்ஸர்களில் ஒன்று ரிங்கு சிங் ஜெர்சி அணிந்து கொண்டு மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கையில் விழுந்தது. பந்து கையில் வந்த குஷியில் அந்த ரசிகர் வேகமாக பந்தை எடுத்துக்கொண்டு மறைக்க முயற்சி செய்தார்.
பந்தை எடுத்து பைக்குள் வைத்து கொண்டு தரவே மாட்டேன் என்று ரசிகர் அடம் பிடிக்க அங்குஇருந்த்து வந்த காவல் அதிகாரி ஒருவர் கோபத்துடன் அதட்டி அந்த பந்தை கொடு என்று கேட்டார். பிறகு அந்த ரசிகரும் பையில் வைத்து இருந்த பந்தை காவல் அதிகாரியிடம் கொடுத்தார். அதனை வாங்கி அவர் மைதானத்திற்குள் வீசினார்.
பந்தை வீசிவிட்டு அந்த ரசிகரை பிடித்து தள்ளிவிட்டு போ போ என்பது போல கூறினார். பந்தை எடுத்து வைத்து விட்டு கொடுக்க அடம் பிடித்த அந்த ரசிகரின் வீடியோவை நெட்டிசன்கள் மோயே மோயே பாடலை வைத்து எடிட் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…