அப்போ விராட் கோலி., இப்போ ரியான் பராக்! தொடரும் ரசிகர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்! வைரலாகும் வீடியோக்கள்…
மார்ச் 22இல் நடந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோலியை ரசிகர் ஒருவர் மைதானத்தில் உள்ளே வந்து பார்த்தது போல நேற்றைய போட்டியில் ரியான் பராக்கை ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார்.

கவுகாத்தி : ஐபிஎல் 2025 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அடித்த 151 ரன்களை 17.3 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே விட்டுக்கொடுத்து 153 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி விளையாடி கொண்டிருக்கும் போது, அந்த அணி கேப்டன் ரியான் பராக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு ரசிகர் ரியான் பராக்கை நோக்கி ஓடி வந்து அன்பு மிகுதியில் ரியான் பராக்கை கட்டிபிடித்துவிட்டார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் வந்து அந்த ரசிகரை மைதானத்தில் இருந்து அகற்றினர். அதன் பிறகு போட்டி தொடங்கப்பட்டது.
இதேபோல ஐபிஎல் 2025 முதல் போட்டியில் (மார்ச் 22) கொல்கத்தாவில் KKR – RCB போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் விராட் கோலியை பார்க்க ஒரு ரசிகர்கள் வேலியை தாண்டி மைதானத்தில் குதித்து கோலியை நோக்கி ஓடி வந்து காலில் விழுந்துவிட்டார். அதன் பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் வந்து அந்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். கிரிக்கெட் வீரர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் ரசிகர்கள் உள்ளே குதித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
ஏன் நடக்கிறது?
இந்தியாவில் கிரிக்கெட் என்பது சினிமா போல மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படுகிறது. தங்கள் திரை நட்சத்திரங்களை பார்த்து கொண்டாடுவது போல கிரிக்கெட் வீரர்களை சூப்பர் ஸ்டார் ஹீரோக்கள் போல கொண்டாடப்படுகிறார்கள். இதனால், மைதானத்தில் அவர்களை அருகில் பார்த்து உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள் பாதுகாப்பு விதிகளை மீறி தங்கள் அபிமான வீரர்களை நேரில் சந்திக்க முயல்கின்றனர். மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும், அவ்வளவு பெரிய கூட்டத்தை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் முழுதாக கட்டுப்படுத்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த சூழல் காரணமாக சிலர் இந்த விதிகளை மீறி உள்ளே நுழைந்து விடுகின்றனர்.
மேலும், இப்படி மைதானத்தில் அத்துமீறி உள்ளே நுழைவது, வீரர்களை சந்திப்பது ஆகியவை சமூக வலைதளத்தில் அவர்களை உடனடியாக வைராக்கி விடுகிறது. இந்த சமூக ஊடக கவனமும் மற்றவர்களை இதே போல முயற்சிக்க தூண்டுகிறது என்கிறது கிரிக்கெட் வட்டராம்.
வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனையா?
இது வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். பெரும்பாலான ரசிகர்கள் நல்ல எண்ணத்துடன் தங்கள் ஆஸ்தான கிரிக்கெட் வீரரை பார்க்க இதனை செய்தாலும் அனைவரும் அப்படி இருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியாது. எதோ ஒரு ரசிகர் திடீரென தீங்கு விளைவிக்கும் பொருளுடன் உள்ளே நுழைந்தால், அது வீரர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
மேலும், ஆட்டத்தின் போது இதுபோன்ற தடங்கல்கள் வீரர்களின் கவனத்தை போட்டியில் இருந்து சிதறடித்து, அவர்களின் செயல்திறனையும் பாதிக்கலாம்.
ரசிகர்களுக்கு என்ன தண்டனை?
இந்தியாவில், மைதானத்தில் அத்துமீறி நுழையும் ரசிகர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுவாக, இது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 447 (குற்றவியல் அத்துமீறல்) அல்லது பிரிவு 332 (பொது ஊழியருக்கு தடையை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படலாம்.இந்த சட்டப்பிரிவின்படி சிறை தண்டனை என பார்த்தால் 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். ரூ.500 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் அவை பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
அதற்கு பதிலாக, மைதானத்தில் நுழைந்த அந்த குறிப்பிட்ட நபரை மட்டும் அந்த மைதானத்தில் நடக்கும் எதிர்கால போட்டிகளை பார்க்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 22, 2025 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் விராட் கோலியை சந்தித்த ரசிகர், கொல்கத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டு, ஐபிஎல் சீசன் முழுவதும் எந்த மைதானத்திலும் நுழைய தடை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
I bet that No one will pass without liking this moment of the day🥹🫶#ViratKohli𓃵https://t.co/y8SKtB1H9D
— Mufaddal Parody (@mufaddal_voira) March 22, 2025
Fan invaded pitch for Riyan parag 😭😭
Itna bura din aagaya 😭 pic.twitter.com/FfI8coZnFH— dAdA (@dAdA_170908) March 26, 2025